மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா புத்தூரில் உள்ள எம்ஜிஆர் அரசு கலைக்கல்லூரியில் ஒரு கிராமம் ஒரு அரசமரம் நடும் திட்ட துவக்க விழா நடைபெற்றது.
புவி காப்பு அறக்கட்டளை ஆலோசகர் சுந்தர் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் கலந்துகொண்டு மரச் கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.
நகர செயலாளர் சுப்பராயன், ஒன்றிய செயலாளர் பிரபாகரன், கல்லூரி முதல்வர் சசிகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.