மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புகழ்பெற்ற பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் மத்திய மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் வந்தனர் அவர்களுக்கு பூம்புகார் மீனவர்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை உடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர்கள் மீனவர்களுடன் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து மீனவர்களின் குறைகளை கேட்டறிந்த அமைச்சர்கள் பின்னர் பேசுகையில் சாகர் பரிக்ரமா திட்டத்தின் படி மத்திய அரசின் மீனவர் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மத்திய மீன்வளத்துறை இணை செயலாளர் நீத்து குமாரி பிரசாத், சிஇஓ. டாக்டர் நரசிம்மமூர்த்தி, மாநில மீன்வளத்துறை இணை இயக்குனர் இளம்வழுதி, உதவி இயக்குனர் ஜெயராஜ் மற்றும் பூம்புகார் அதன் சுற்றுவட்டார மீனவ கிராம பிரதிநிதிகள் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டனர். பூம்புகார் மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான சுருக்குமடிவலை பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை மத்திய மின்வள அமைச்சர் இடம் வழங்கினர்.