ஆதீனத்திடம் உத்தரவு பெறும் நிகழ்ச்சி

69பார்த்தது
ஆதீனத்திடம் உத்தரவு பெறும் நிகழ்ச்சி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ திருநிலை நாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் எனப்படும் சட்டை நாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற ஓராண்டு நினைவு பெற்றதை முன்னிட்டு சம்வத்ஸராபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தர்மபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளிடம் உத்தரவு பெறும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கோவில் சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து ஆதீனத்திடம் உத்தரவு பெற்றனர்.

தொடர்புடைய செய்தி