மயிலாடுதுறை வருவாய் மாவட்ட அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் ஹரிஷ் என்கிற மாணவன் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தார். மேலும் இந்த மாணவன் சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதனை அடுத்து நேற்று பள்ளி ஆசிரியர்கள் மாணவனுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.