மாணவர்களுக்கு கோடைகால சான்றிதழ் பயிற்சி

51பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ப. ஆகாஷ், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்

கோடைகால சான்றிதழ் பயிற்சி வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு பைத்தான், ரோபோடிக்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங், அபாகஸ், உள்ளிட்டவைகளுக்கு கோடைகால சான்றிதழ் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கான முழு விவரத்தையும் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் தளத்தில் செயல்படுகின்ற மாவட்ட கல்வி தன்முனைப்பு திட்ட அலுவலகத்தில் பெற்று கொள்ளவும்.
மேலும், பைத்தான், ரோபோடிக்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகிய பயிற்சிகள் மே12-ம் தேதி முதல் மே24-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பயிற்சிகளுக்கு 9842026936 என்ற எண்ணையும்இ அபாகஸ் பயிற்சியானது மே15-ம் தேதி முதல் மே30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பயிற்சிக்கு 9342144539 என்ற எண்ணையும் தொடர்பு கொண்டு விவரம் அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ப. ஆகாஷ், தெரிவித்துள்ளார.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி