மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்திற்கு மாவட்ட தலைவர் சிவபழனி தலைமை தாங்கினார். இந்த கருத்தரங்கத்தில் சங்கத்தின் மாநில செயலாளர் கோதண்டபாணி "பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றும் தமிழக அரசும் - இழந்த உரிமைகளை மீட்பதற்காக போராடும் அரசு ஊழியர்களும்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வில் திரளானோர் பங்கேற்றனர்.