மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கொள்ளிடம், ஆனைக்காரன் சத்திரம் ஊராட்சி அனுமந்தபுரம் கிராமத்தில் உள்ள அமிர்த குளக்கரையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஊராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடைபெற்றது. எதிர் நிகழ்ச்சியில் கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் விமான சட்ட கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார். ஒன்றிய பணி மேற்பார்வையாளர் கவிதா, ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் இதில் பங்கேற்றனர்.