மயிலாடுதுறை: திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த கொள்ளையன் கைது

80பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா மங்கைமடத்தைச் சேர்ந்தவர் சர்க்கரை ஆலை ஊழியர் செல்வேந்திரன். இவரது வீட்டின் கதவை உடைத்து கடந்த ஜனவரி 10ஆம் தேதி 125 பவுன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த வழக்கில் டிஎஸ்பி ராஜ்குமார் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து குற்றவாளியைத் தேடி வந்தனர். இந்நிலையில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட திருவாரூர் மாவட்டம் பானா கரையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்து 53 பவுன் தங்க நகைகள் மற்றும் தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி