காளி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம்

74பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல கஞ்சா நகரம் கிராமத்தில் மின்மாற்றியில் பழுது ஏற்பட்டுள்ளது.

மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் மின்மாற்றி பழுது நீக்கம் செய்யப்பட்டது. ஆனால் மின்சாரம் வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி