மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையார் பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வந்து திரும்பும் சாலை பல ஆண்டுகளாகவே மிகவும் சீர்குலைந்து குண்டும் குழியமாக காணப்படுகிறது.
இதனால் இச்சாலையில் பயணம் செய்யும்போது மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த பகுதி முக்கியசாலையாக இருப்பதால் இந்த சாலையை விரைவில் சீரமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.