சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

85பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பூம்புகார் தொகுதிக்கு உட்பட்ட திருவிளையாட்டம் ஊராட்சி நரசிங்கநத்தம் கிராமத்தின் சாலைகள் பழுதடைந்து பள்ளம் விழுந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.

நரசிங்கநத்தம் முதல் அன்னவாசல் வழியாக வடகரை செல்லும் முக்கியசாலையாக இந்த சாலை அமைந்துள்ளது.

எனவே இதனை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி