மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருவிளையாடல் ஊராட்சிக்குட்பட்ட முத்தூர் பகுதியில் ஊராட்சி நூலக கட்டிடம் இயங்கி வருகிறது.
தற்போது அந்த கட்டிடம் சேதமடைந்து பயன்பாட்டிற்கு ஏதுவாக இல்லை. அந்த கிராமத்தைச் சேர்ந்த பல பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்படுத்திய நூலகத்தில் வசதி ஏற்படுத்தி நூலகத்தை சரி செய்து தர அப்பகுதி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.