மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகில் உள்ள கேசிங் ஆத்தூர் இடையிலான பாலம் சிதிலமடைந்து உள்ளதால் சில வருடங்களுக்கு முன்பு அந்த பாலத்தை கட்டி முடித்தனர். தற்போது பெய்துள்ள கனமழையால் அதன் பக்கவாட்டில் மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதனை சீர் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. எனவே இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.