மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்த பொதுமக்கள் தங்களது மனுக்களை வழங்கினர். மேலும் கூட்டத்தின் போது மொத்தமாக 250 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.