போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்

83பார்த்தது
போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் அம்மா உணவகம் அருகே ஆட்டோ ஸ்டாண்ட் அமைந்துள்ளது. அம்மா உணவகத்தில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் ஆட்டோ ஓட்டுநர்கள் அவதி அடைந்து வந்தனர். என் நிலையில் நேற்று அம்மா உணவகம் முன்பு மூக்கை மூடிக்கொண்டு‌ நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் கழிவுநீரை அகற்ற பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி