ஒற்றை மருத்துவ திணிப்பைக் கைவிட வலியுறுத்தி மனு

74பார்த்தது
ஒற்றை மருத்துவ திணிப்பைக் கைவிட வலியுறுத்தி மனு
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒற்றை மருத்துவ திணிப்பைக் கைவிட கோரிக்கை விடுத்து மனு அளித்தனர். அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் மாணவா்களிடம் ஆங்கில ஒற்றை மருத்துவ நூதன திணிப்பைக் கைவிட வலியுறுத்தி இயற்கை வழி வாழ்வியலாளா் கூட்டமைப்பு சாா்பில் மாநில ஒருங்கிணைப்பாளா் ரா. சுதாகா் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோா் தங்கள் குழந்தைகளுடன் வந்து மனு அளித்தனா்.

நாட்டில் சித்தா, ஹோமியோபதி, ஆயுா்வேதம், யுனானி, நேச்சுரோபதி, அக்குபஞ்சா் மற்றும் மரபியல் வாழ்வியல் முறை என ஏராளமான மருத்துவ முறைகள் உள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள் மக்களாட்சி முறை, இந்திய அரசியலமைப்பு சாசன கோட்பாடுகளுக்கு எதிராக பள்ளி குழந்தைகளிடம் ஒற்றை மருத்துவத்தை திணிப்பதைக் கைவிட வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா். இயற்கை விவசாயி அ. ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தொடர்புடைய செய்தி