மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருநகரி கல்யாண ரெங்கநாதப் பெருமாள் கோயிலில் பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால், கருடசேவையை வேறொரு நாளில் நடத்த திட்டமிடப்படுவதாக தெரிகிறது. இதனால், தேவையில்லாத குழப்பங்கள், சச்சரவுகள் ஏற்படக்கூடும் என்பதால் இந்த உற்சவத்தை எவ்வித மாற்றமும் இன்றி 2025 ஜன. 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருநாங்கூா், திருமணிக்கூடம், காவளம்பாடி, பாா்த்தண்பள்ளி, கீழச்சாலை, அண்ணன்பெருமாள் கோயில் கிராமமக்கள் மனு அளித்தனா்.