வீட்டுமனை பட்டா கேட்டு நூதனப் போராட்டம்

75பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள ஏகோஜி மகாராஜபுரம் கிராமத்தில் சுமார் 45 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் குடிசைகள் அமைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி