மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட நாகேஸ்வரமுடையார் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்ட திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கும்பாபிஷேக பத்திரிகை சுவாமிக்கு படைக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த சமய அறநிலையத்துறை கோவில் செயல் அலுவலர் முருகன் முதல் பத்திரிக்கை வெளியிட திருப்பணி உபயதாரர் மார்க்கோனி பெற்றுக்கொண்டார்.