மயிலாடுதுறை மாவட்டம் சுந்தரபஞ்சான்வடியில் நெடுஞ்சாலை பணிகள் காரணமாக அங்கிருந்த பேருந்து நிழலகம் இடிக்கப்பட்டது. இதனால் பயணிகள் பேருந்து நிழலகம் இல்லாமல் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். எனவே, புதிய பேருந்து நிழலகம் கட்டித் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகனிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய பேருந்து நிழலகம் கட்டி முடிக்கப்பட்டது.