மயிலாடுதுறை மாவட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்த மாதம் 15 ஆம் தேதி மாலை வருகை தர உள்ளார். அதனை அடுத்து திருவெண்காட்டில் தங்க உள்ள அவர் மறுநாள் மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ பி சி கல்லூரி வளாகத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.
அதனை அடுத்து மணக்குடி பேருந்து நிலையம் வர உள்ள இடத்தையும் ஆய்வு செய்ய உள்ளார்.
அதனை ஒட்டி அமைச்சர்கள் கோவி. செழியன் மற்றும் கேகே என் நேரு ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.