மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருக்கடையூரில் உலக பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் ஆந்திர பிரதேச வீட்டு வசதித்துறை அமைச்சர் தனது குடும்பத்துடன் வந்த சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.