மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வருகிற ஞாயிற்றுக்கிழமை முற்பகல் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு I மற்றும் IA பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு மயிலாடுதுறை மாவட்டத்தில் 10 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.
இந்த தேர்வுகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு கூடத்தில் மின் சாதனங்கள் கைபேசிகள் உள்ளிட்டவை அனுமதிக்க கூடாது என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.