சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை

64பார்த்தது
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் மண்டலம் காரணமாக மயிலாடுதுறை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மிதமான அல்லது கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து சீர்காழி அடுத்த வானகிரி, தருமகுளம், நாகநாதன் கோயில், கீழப்பெரும்பள்ளம், இராசாங்குளம், குச்சிபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி