மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி நூலகம் பழுதடைந்த நிலையில் 2003 ஆம் ஆண்டு வாடகை கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.
போதிய இடவசதி இல்லாததால் வாசகர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். 12 ஆண்டுகள் கடந்த நிலையில் புதிய நூலகம் கட்டி தர வேண்டும் என்று பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் எடுத்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு தரகம்பாடியில் புதிய நூலகம் கட்டி தர அனுமதி அளித்து ரூபாய் ஒரு கோடியே 87 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என நூலகத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.