தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு தேமுதிக நகர செயலாளர் ராஜசேகர் தலைமையில் நிர்வாகிகள் மலர் தூவி மெழுகுவர்த்தி மௌன அஞ்சலி செலுத்தினர். மாவட்ட அவை தலைவர் கே எஸ் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.