மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தந்தை பெரியார் திராவிட கழக மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஈரோட்டில் ஜூலை 21 ஆம் தேதி நடைபெற உள்ள சுயமரியாதை இயக்கம் குடியரசு நூற்றாண்டு விழா மாநாடு குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பரசுராமன், செயலாளர் பார்த்திபன், அமைப்பாளர் நந்திர சேத்திரன், டெல்டா மண்டல செயலாளர் பெரியார் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.