மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி தேரெழுந்தூர் பகுதியில் விவசாயிகள் குருவை சாகுபடிக்காக வயலை தயார் செய்து, நேரடி நெல் விதைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நெல் விதைகளை நேரடியாக வயலில் விதைத்து சாகுபடி செய்வதன் மூலம் ஏக்கருக்கு 12, 000 சேமிக்க முடிகிறது என்றும், விதைத்த நெல் பயிரை 14 முதல் 21 நாட்களில் களைந்து தேவையான இடங்களில் நடவு செய்தால் அதிக மகசூல் கிடைப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.