மயிலாடுதுறை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக்கம்பத்தை சேதப்படுத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் அவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி அக்கட்சியினர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தகுந்த ஆதாரங்கள் சமர்ப்பித்தும் இதுவரை காவல் துறையினர் குற்றவாளிகளை கைது செய்யாமல் காலம் தாழ்த்துவதாக தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.