மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் இரட்டை காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத உற்சவம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது. முன்னதாக திரளான பக்தர்கள் சட்டை நாதர் சுவாமி கோவிலில் இருந்து கரகம் எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். தொடக்க கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜையுடன் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.