மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மகளிர் திட்டம் சார்பில் சுய உதவிக் குழுக்களின் மூலம் சிறுதானிய உணவகம் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த திறப்பு விழாவில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு சிறுதானிய உணவகத்தை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். மேலும் இந்த நிகழ்வில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.