சீர்காழி டிஎஸ்பி அலுவலகத்தில் சீர்காழி உட்கோட்டத்துக்குள்பட்ட நகைக்கடைகள் மற்றும் அடகு கடை உரிமையாளா்களின் பாதுகாப்பு சம்பந்தமான அறிவுறுத்தல்களை கடைபிடிக்க வேண்டிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், டிஎஸ்பி ராஜ்குமாா் பேசியது: நகை மற்றும் அடகு கடைகளில் பாதுகாப்பு கருதி ஒன்றன்பின் ஒன்றாக 2 கதவுகள் அமைக்க வேண்டும், உறுதியான ஸ்ட்ராங் ரூம் அமைத்து பொருள்களை பாதுகாக்க வேண்டும், எச்சரிக்கை அலாரம் வைக்க வேண்டும், அடகு கடைகளில் பழைய லாக்கர்களை மாற்றி புதிய வகை லாக்கரை பொருத்த வேண்டும்,
தனியாக காவலாளியை நியமித்து கண்காணிக்க வேண்டும், கடையில் பணியாற்றும் நபா்களின் முழு விவரங்களையும் உறுதிப்படுத்தி காவல் நிலையத்திற்கு ஒரு நகல் வழங்க வேண்டும் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்றார். எழுத்தா் ஆதி நன்றி கூறினார்.