நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை கொற்கை பகுதியைச் சேர்ந்தவர் ரஜினி (வயது 48). இவர் பழைய வழக்கு ஒன்றில் கடந்த 6 மாதமாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. அவர் திருப்பூரில் பதுங்கி இருப்பதாக கன்னங்குறிச்சி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை திருப்பூரில் தலைமறைவாக இருந்த ரஜினியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.