தரங்கம்பாடி: பாம்பு கடித்து பெண் சாவு

596பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தில்லையாடி நாகப்பன் நகரை சேர்ந்தவர் வனிதா. இவர் கூலி வேலைக்கு சென்று கிள்ளியூரில் வயலில் பருத்தி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது பாம்பு கடித்ததில் ஆபத்தான நிலையில் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது செல்லும் வழியிலேயே வனிதா உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து செம்பனார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். உயிரிழந்த வனிதாவிற்கு கணவர் இல்லை. மூன்று பெண் குழந்தைகள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி