மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மாணிக்கப்பங்கு கிராமத்தில் இருந்து அனந்தமங்கலம் செல்லும் சாலையில் கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக செல்லும் பைப் லைனில் விரிசல் ஏற்பட்டு குடிநீர் வெளியேறி வருகிறது. கோடை காலம் நெருங்கியுள்ள நேரத்தில் குடிநீரில் தேவை மிகவும் முக்கியம் என்பதால் அதனை விரைந்து சரி செய்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.