மயிலாடுதுறை: வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

68பார்த்தது
மயிலாடுதுறையில் வேலுநாச்சியார் பிறந்தநாள் விழா தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கொண்டாடப்பட்டது. வீரமங்கை வேலுநாச்சியாரின் 295-ஆவது பிறந்தநாள் விழாவை மயிலாடுதுறையில் கிட்டப்பா அங்காடி முன் அலங்கரித்து வைக்கப்பட்ட வேலுநாச்சியாரின் உருவப்படத்துக்கு அக்கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

மாவட்ட தலைவர் சி. எஸ். குட்டிகோபி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் அமீன், மாவட்ட பொருளாளர் ரமேஷ், மாவட்ட இணை செயலாளர் அறிவரசு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி