மயிலாடுதுறை: சின்ன மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

80பார்த்தது
மயிலாடுதுறை நகர் பகுதியில் வடக்கு ராமலிங்க தெருவில் எழுந்து அருள் பாலித்து கொண்டு இருக்கும் அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன சின்ன மாரியம்மன் கோவில் 66 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மயிலாடுதுறை நகர் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் திரளானோர் பங்கேற்றனர். முன்னதாக கங்கணம் கட்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி