மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று தமிழன் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் மாநில அளவிலான கராத்தே சிலம்பம் மற்றும் யோகா சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். பல்வேறு பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்ட வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.