மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட தரங்கை பங்கு மாங்குடியில் உள்ள புனித சவேரியார் ஆலயத்தின் 19 ஆம் ஆண்டு தேர் திருவிழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. இன்னிசை நிகழ்ச்சியுடன் வானவேடிக்கை மற்றும் மின் அலங்காரத்தில் தேர் பவனி சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்ட சிறப்பு பாடல் திருப்பலியும் நடைபெற்றது. இதனை சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.