மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ முத்துராஜம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் டெக்ஃபெஸ்ட் 2025 எனும் அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு பள்ளியின் தாளாளர் சிவசங்கரன் தலைமை வகித்தார். இதில் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அறிவியல் சார்ந்த படைப்புகளை உருவாக்கி காட்சிப்படுத்தியிருந்தனர்.
இயற்கை விவசாயம், நிலத்தடி நீர் சேமிப்பு, நிலநடுக்க எச்சரிக்கை உள்ளிட்ட பல்வேறு படைப்புகள் இடம் பெற்றிருந்தன.