பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் தற்செயல் விடுப்பு எடுத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கொண்டுள்ள வேலை நிறுத்த போராட்டம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில், குத்தாலம், சீர்காழி, கொள்ளிடம் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.