மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 11ம் தேதி முதல் 13ஆம் தேதி வரை வங்க கடலில் உருவான காற்று அடித்த தாழ்வு மண்டலம் காரணமாக பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் மஞ்சளாறு, மகிமலை ஆறு, வீரசோழன் ஆறு உள்ளிட்ட ஆறுகளில் ஆகாயத்தாமரை செடிகள் அதிக அளவில் அடித்து வரப்பட்டது.
தற்பொழுது இந்த செடிகள் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருவிளையாட்டம் பகுதியில் சிறு வாய்க்கால்களில் படர்ந்துள்ளது. இதை அப்புறப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.