மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அரசர் ஊராட்சி மெயின் ரோடு சென்னை பைபாஸில் இணையும் வளைவு சாலையில் கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. தற்போது அந்த சாலையில் வளைவில் சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டு குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இங்கு வளைவு பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.