மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருக்கடையூரில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஆண்டுதோறும் ரேக்ளா பந்தயம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் ரேக்ளா பந்தயம் நடைபெறுவதை முன்னிட்டு தங்களது குதிரைகளை போட்டியில் வெற்றி பெறச் செய்ய தீவிர பயிற்சியில் அதன் உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனை வாகன ஓட்டிகள் அனைவரும் ஆர்வமுடன் கண்டு செல்கின்றனர்.