மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த அகணி கிராமத்தில் வளநாடு தற்சார்பு வேளாண்மை உற்பத்தியாளர் நிறுவனத்தின் பொது சேவை மையம் தொகுக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு நபார்டு வங்கியின் பொது மேலாளர் ஜோதி சீனிவாஸ் தலைமை வகித்து சேவை மையத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். தொடர்ந்து காட்சிப்படுத்தப்பட்டிருந்த கைவினைப் பொருட்களை பார்வையிட்டார். நிகழ்வின் ஏற்பாடுகளை வேளாண்மை உற்பத்தியாளர் நிறுவனத்தை சேர்ந்த சுபாஷினி செய்திருந்தார்.