பெரம்பூர்: இழப்பீடு கோரி ஆா்ப்பாட்டம்

78பார்த்தது
முட்டம் கிராமத்தில் சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்ட 2 இளைஞர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசை வலியுறுத்தி, மயிலாடுதுறையில் மது போதை பொருள் ஒழிப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

பெரம்பூர் காவல் நிலைய எல்லைக்குள் பட்ட முட்டம் கிராமத்தில் பிப்ரவரி 14-ஆம் தேதி ஹரிஷ், ஹரிசக்தி ஆகிய இரண்டு பட்டதாரி இளைஞர்கள் சாராய வியாபாரிகளால் கொலை செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 சாராய வியாபாரிகள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். 

மேலும், பெரம்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய ஆய்வாளர் உள்ளிட்ட அனைத்து போலீசாரும் ஒட்டுமொத்தமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். ஆனால், உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு இழப்பீடு அறிவிக்கவில்லை. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மண்டல செயலாளர் வழக்குரைஞர் வேலு. குபேந்திரன், மதுபோதை ஒழிப்பு இயக்க மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் இ. ராமதாசன் ஆகியோர் பேசினர். 

ஆர்ப்பாட்டத்தில், உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடு, அவர்களது குடும்ப வாரிசுகளுக்கு அரசு பணி, தமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்பனையை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். பாதிக்கப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10,000 நிவாரண உதவியாக வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி