மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மையம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாளை (செப்டம்பர் 6) மற்றும் செப்டம்பர் 7ஆம் தேதிகளில் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் தனியார் குழுமத்தில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு மையத்திற்கு வரும் பெண்கள் ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் கல்விச் சான்றிதழ் எடுத்து வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு பணி நியமன ஆணை உடனடியாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.