மயிலாடுதுறை: கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

85பார்த்தது
மயிலாடுதுறை நகராட்சி சார்பில் மயிலாடுதுறை அடுத்த மூங்கில் தோட்டம் பகுதியில் நகர்ப்புற நல அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா என அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள கடை ஓட்டலில் வைக்கப்பட்டிருந்த 50 கிலோவிற்கு மேலான பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கடையின் உரிமையாளருக்கு ரூபாய் 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி