மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் அருகே கஞ்சா நகரம் கிராமத்தில் புனித அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டு பிறப்பை ஒட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
புனித அந்தோனியார் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு அன்று சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக அங்கு ஏராளமானோர் அங்க பிரதட்சணம் செய்து மெழுகுவர்த்தி வினோத வழிபாட்டில் ஈடுபட்டனர்.