சீா்காழி: ஊராட்சி செயலக கட்டடங்கள் திறப்பு

52பார்த்தது
சீா்காழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் கட்டப்பட்ட ஊராட்சி செயலக கட்டடங்களை தமிழக பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ. வீ. மெய்யநாதன் திறந்து வைத்தாா்.

பூம்புகாா் ஊராட்சியில் ரூ. 42 லட்சத்தில் ஊராட்சி செயலக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. திறப்பு விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ஏ. பி. மகாபாரதி தலைமை வகித்தாா். ஒன்றிய குழுத் தலைவா் கமல ஜோதி தேவேந்திரன், ஊராட்சித் தலைவா் புஷ்பவல்லி ராஜா, ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ. வீ. மெய்யநாதன் கலந்து கொண்டு கட்டடத்தை திறந்து வைத்தாா்.எம்எல்ஏக்கள் எம். பன்னீா்செல்வம், நிவேதா எம். முருகன், ஒன்றிய திமுக செயலாளா்கள் பஞ்சு குமாா், பிரபாகரன், ஒன்றிய பொறியாளா் தெய்வானை, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செல்வமுத்து, தமிழ்ச்செல்வன், உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி